Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Coimbatore agricultural Univ. students stage protest for farmers

இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும், விவசாயிகள், மாணவர்கள், சமூக இயக்கங்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

இதே போன்று திருவள்ளூர் பொன்னேரி அரசுக் கல்லூரி மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும், மத்திய பாஜக அரசை எதிர்த்தும், விவசாயிகளை ஆதரித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+