டிவி விவாதத்தில் பேசியதில் தவறு இல்லை: இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு
இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
Recommended Video

கோவை: தனியார் தொலைகாட்சி விவாதத்தில், பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
அரசாங்கதால் கருத்துரிமையை பறிக்கும் சமீபத்திய கைதுகளை நீதிமன்றம் ஏற்காமல், நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும் என அமிர் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் தனியார் தொலைகாட்சி இம்மாதம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குநர் அமீர் மீது, நிறுவனம் மற்றும் அதன் செய்தியாளர் அமீர் மீது வழக்கு போடப்பட்டது. இதில் அமீர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அமீர்க்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜாராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, இன்று பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல்நிலையத்தில் அமீர் விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர் பேசியதாவது:
தொலைக்காட்சியில் கலந்து கொண்டதன் நோக்கம் , என் தரப்பில் பேசப்பட்டது மற்றும் எதிர் தரப்பில் பேசியது குறித்து காவல் துறையிடம் விளக்கம் அளித்தேன். நிகழ்ச்சியின்போது என்னை தாக்க வந்தவர்கள் தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். விவாதத்தில் 'அமீர் பேசியதில் என்ன தவறு உள்ளது?' என இன்று முன்ஜாமீன் வழங்கிய நீதிபதியும் கேட்டு இருக்கிறார். தன் மீது எந்த தவறும் இல்லை.
சமீபத்திய அனைத்து கைதும், கருத்துரிமையை பறிக்கும் வகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவை. இவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நீதிமன்றங்கள் நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமீர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications