கோவை மாணவி பலி: முதல்வருடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் தீவிர ஆலோசனை
கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியானது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியானது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்ற தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி பரிதாபமாக பலியாகி உள்ளார்.

மாடியில் இருந்து பயிற்சியாளர் மூலம் அவர் தள்ளிவிடப்பட்டு இறந்து இருக்கிறார். மாடியில் இருந்து கீழ் விழும் போது மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார். கவனக்குறைவாக செயல்பட்ட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. எந்த பாதுகாப்பும் இல்லாமல் எப்படி, பேரிடர் மேலாண்மை பயிற்சிக்காக மாணவிகள் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அந்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவும் குரல்கள் வர தொடங்கி இருக்கிறது.

கோவை மாணவி பலியானது குறித்து தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகிறார். கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
கல்லூரி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கே.பி.அன்பழகன் முதல்வருடன் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications