பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது பயிற்சியாளர் தள்ளியதால் விபரீதம்.. கோவை மாணவி பரிதாப பலி
Recommended Video

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்ற தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு பேரிடர் பிரச்சனைகளில் போது எப்படி தப்பிக்க வேண்டும் என்று இதில் கற்றுத்தரப்பட்டது. அதேபோல் தீ விபத்து சம்பவத்தின் போது எப்படி மாடியில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்க வேண்டும் என்றும் கற்றுத்தந்தனர்.

இந்த பயிற்சிக்காக, பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர், லோகேஸ்வரி என்று மாணவியை அழைத்துள்ளார். அந்த மாணவி அந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் மூன்றாவது மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கும் போது, அந்த மாணவி, அந்த மோசமான சம்பவ நடந்து இருக்கிறது. மாடியில் இருந்து கீழே விழும் போது கீழே வலை வைத்து பிடிக்கும் முறையை பயிற்சி அளித்து இருக்கிறார்கள். இதில் கீழே விழும் போது, அந்த மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு இருக்கிறது.
பலத்த காயங்களுடன் அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை செய்ய முடியாது கஷ்டம் என்றதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். ஆனால் அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. கோவை போலீசால் தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பிரதேச பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதிச்சடங்குகளுக்கு பின் லோகேஸ்வரி உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
#Lokeshwari, 19yr old Girl dies while gng through disaster management training n college at #Coimbatore. She was forced & pushed by trainer to jump from 2nd floor rail as she hesitated. She sustained injuries n head & declared brought dead. Share Max until d Trainer shld b arrest pic.twitter.com/4IvblVzt7r
— #Thala (@iam_K_A) July 12, 2018
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications