பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!
கோவை: ஏற்கனவே நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது நெஸ்லேவின் பால் பவுடரும் புதுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. குழந்தைகளுக்கான இந்த பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் கூட்டம் கூட்டமாக நெளிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில்தான் இந்த குமட்டல் சம்பவம் நடந்துள்ளது.
மேகி நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்தைக் காலி செய்யும் வகையில் உள்ளதாக உ.பி., பீகார் என பல மாநிலங்களில் பிரச்சினையாகி வருகிறது. இந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்குகளும் பாய்ந்து வருகின்றன.

இந்த நிலையில் நெஸ்லேவின் பால் பவுடரால் புது சர்ச்சை வெளியாகியுள்ளது. கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். டாக்சி டிரைவரான இவர் தனது குழந்தைக்கு வழக்கமாக வாங்கும் நெஸ்லே பால் பவுடரை வாங்கியுள்ளார். 380 கிராம் நெஸ்லே நான் புரோ 3 டப்பாவை அவர் வாங்கினார்.
இவருக்கு 18 மாதத்தில் ஒரு குழந்தையும், இன்னும் ஒரு இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். 18 மாதக் குழந்தைக்கு இவர் பேபி பார்முலாவைக் கொடுத்து வருகிறார். இரட்டைக் குழந்தைகளுக்காக இந்த நெஸ்லே பால் பவுடரை அவர் வாங்கி வந்தார்.
வீட்டுக்கு வந்து டப்பாவைத் திறந்து பால் பவுடரை எடுக்க முயன்றபோது உள்ளே புழுக்கள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பிரேம் ஆனந்த்.
மேலும் அவரது குழந்தைக்கு 2 நாட்கள் கழித்து தோலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விவகாரம் குறித்து நெஸ்லேவின் வாடிக்கையாளர் பிரிவில் புகார் கொடுத்தார் பிரேம் ஆனந்த். இதையடுத்து உள்ளூர் ஏரியா மேனேஜர் கிருஷ்ணபெருமாளுக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு நெஸ்லேவிடமிருந்து நோட்டீஸ் போனது. அவர் வேறு பால் பவுடர் டப்பாவைத் தருவதாக பிரேம் ஆனந்த்திடம் கூறினார். ஆனால் அதை ஏற்க பிரேம் ஆனந்த் மறுத்து விட்டார்.
இதையடுத்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் அந்த பால் பவுடரை சோதனை செய்ய நெஸ்லே பிரதிநிதி கூறியுள்ளார். ஆனால் அதையும் பிரேம் ஆனந்த் ஏற்கவில்லை. இது குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே பாரபட்சமற்ற நடுநிலையான விசாரணை தேவை என்று பிரேம் ஆனந்த் கூறி விட்டார்.
இந்த நிலையில் இந்த பால் பவுடரை கோவையில் உள்ள உணவு ஆய்வுகத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அதில் 28 உயிருள்ள புழுக்கள் இருந்ததும், 22 சிறிய வகை புழுக்கள் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நுிர்வாகத் துறையை அணுகி இந்த பால் பவுடரின் சாம்பிளை அவர்களிடம் கொடுத்து புகார் செய்தார் பிரேம் ஆனந்த். இந்தப் பவுடர் மாதிரியை ஆய்வு செய்த அங்குள்ள நிபுணர்கள் இந்த பால் பவுடர் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிக்கை கொடுத்துள்ளனர்.
இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.
இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications