ஓபிஎஸ் அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். அருண்குமாரின் வருகையால் ஓபிஎஸ் அணி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் 12 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் கூவத்தூரில் இருந்து தப்பி சொந்த ஊருக்கு சென்றவர். எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தவர் ஆவார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அதனையடுத்து, தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். பிப்ரவரி 5ஆம் தேதி தனது முதல்வர் பதவியை அவர் திடீரென ராஜினாமா செய்ததும், முதல்வராக பொறுப்பேற்க சசிகலா முயற்சித்தார்.

இதனையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலாவிற்கு எதிராக குரல் எழுப்பினார். இதனால் கட்சி இரண்டாக பிளவு பட்டது.
கூவத்தூரில் 122 எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.
ஓபிஎஸ் அணியில் பல எம்எல்ஏக்கள் இணைந்தனர். எம்பிக்களும் இணைந்து ஆதரவு தெரிவித்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து, சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அணிக்கு அருண் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுவரை பன்னீர்செல்வம் அணிக்கு அவர் உள்பட 12 எம்எல்ஏக்கள் ஆதரவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரின் ஆதரவும் உள்ளது.
இதனிடையே திருவெற்றியூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய டிடிவி தினகரன், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் விரைவில் தங்களின் அணிக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications