கவனிச்சீங்களா? ஆட்சியர் பத்மஜா அங்கே.. அருள் விக்னேஷ் இங்கே! கள்ளக்குறிச்சியில் இன்று நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில், இன்று இருவரும் ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாக்களில் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே, ஆட்சியர் பத்மஜா நிகழ்ச்சியை பாதியில் விட்டுச் சென்றதாகப் பரவிய தகவலும் கவனம் பெற்றுள்ளது. உண்மையில் என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகச் செய்திகள் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.. இதுதொடர்பாக ஆட்சியரின் கணவர் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தவெக அருள் விக்னேஷ்
இதையடுத்து, அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் அதிமுக தரப்பில் டிஜிபி அலுவலகத்தில் தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன..
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். கலெக்டர் பங்களாவில் செக்யூரிட்டிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும்போது, தான் அங்கு எப்படி செல்ல முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்தப் பரிசோதனைக்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 13-ம் தேதி குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வன்னி அரசு கலந்துகொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவும் பங்கேற்றார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா
விழாவில் மாணவிகளுக்கு ஆட்சியர் இனிப்புகளை வழங்கினார். அப்போது மாணவிகளுடன் இயல்பாகப் பேசியபடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், நிகழ்ச்சி முடிவதற்கு முன்பேயே ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் திடீரென தகவல்கள் பரவின.
ஆனால், இந்தத் தகவல் உண்மையில்லை. ஆட்சியர் பத்மஜா நிகழ்ச்சி முடியும் வரை முழுமையாகப் பங்கேற்றுள்ளார். விழாவுக்கு சிரித்த முகத்துடன் வந்த அவர், நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்னதாக, நேற்று கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்கும் நோக்கில் அவர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்று உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் வன்னி அரசு பங்கேற்ற குழந்தைகள் தின விழாவில் ஆட்சியர் பத்மஜாவும் கலந்துகொண்டுள்ளார்.
அருள் விக்னேஷ் - குழந்தைகள் தின விழா
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷும் இன்று குழந்தைகள் தின விழாவில் பங்கேற்றுள்ளார். காட்டனந்தல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர், மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கினார்.
இப்படி ஒரே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆட்சியர் பத்மஜா உளுந்தூர்பேட்டையிலும், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் காட்டனந்தல் கிராமத்திலும் நடைபெற்ற குழந்தைகள் தின விழாக்களில் பங்கேற்றுள்ளனர். இருவரும் வெவ்வேறு இடங்களில், ஒரே நாளில் பங்கேற்றிருப்பது தற்போதைய சர்ச்சைக்கு மத்தியில் கவனம் பெற்றுள்ளது..!!


Click it and Unblock the Notifications
