"பரதேசி"… வாட்ஸப்பில் வெளுத்து வாங்கும் கலெக்டரின் “கீரின் ஸ்பீச்”!
சென்னை: வாட்ஸ் அப்பில் உதவி கமிஷனர் பேசடிய ஆடியோவின் சூடு குறைவதற்குள்ளாக அடுத்ததாக மாட்டியுள்ளார் ஒரு மாவட்ட கலெக்டர்.
சமீபத்தில் பெண் காவலரிடம் வம்பு பேசி வாட்ஸ் அப்பில் சிக்கினார் வடசென்னையில் பணியாற்றிய உதவி கமிஷனர் ஒருவர். இவர் மீதான விசாரணை, காவல் துறையில் நடந்து வருகிறது. அடுத்து சென்னையில் திருநங்கையும், போக்குவரத்து காவலரின் கடும் வாக்குவாதமும் வாட்ஸ் அப் பதிவானது.

மீண்டும் சென்னை போக்குவரத்து துணை கமிஷனரும், போக்குவரத்து காவல் ஆய்வாளரின் உரையாடலின் வாட்ஸ் அப் பதிவு. இவ்வாறு காவல்துறையையே சுற்றி கலங்கடித்துக் கொண்டு இருந்த வாட்ஸ் அப்பில், இப்போது தென்மாவட்ட கலெக்டர் ஒருவர் பேசுவதாக இடம்பெற்றுள்ள உரையாடல் அதிர்ச்சிகரகமாக உள்ளது.
அந்த வாட்ஸ் அப் உரையாடல்...
ராமசந்திரன்: ஹலோ... குட்மார்னிங் சார்.
கலெக்டர்: ஹலோ ராமசந்திரனா?
ராமசந்திரன்: ஆமாம் சார்
கலெக்டர்: என்ன மெசேஜ் கொடுத்து இருக்கிறீங்க... என்ன மெசேஜ் அது?
ராமசந்திரன்: என்ன மெசேஜ்ன்னா... எனக்கு புரியல...... என்ன கேட்கிறீங்க...?
கலெக்டர்: பேப்பர் மில் சம்பந்தமா ஒரு லட்சம் பணம் கொடுத்தீங்கன்னு மெசேஜ் கொடுத்து இருக்கீங்க. யார் கிட்ட கொடுத்தீங்க....
ராமசந்திரன்: உண்மையத்தான் சொல்றேன்.
கலெக்டர்: யாருக்கு கொடுத்தீங்க?
ராமசந்திரன்: உங்கிட்ட தான் கொடுத்தேன். உங்க ரூம்ல வந்து கொடுத்தேன்... பி.சி இரண்டு பேர் சாட்சி. எந்த கோயில்லேயும் சத்தியம் செய்றேன்.
கலெக்டர்: பரதேசி (இதற்கு பிறகு அவர் கொஞ்சம் பச்சையாக, கொச்சையாக பேசியுள்ளார்)
ராமசந்திரன்: எவ்வளவு அழகா பேசுறீங்க.
கலெக்டர்: ......................
ராமசந்திரன்: உண்மையை சொல்றேன்.
கலெக்டர்: யார் கிட்ட................ பணம் வந்து கொடுத்ததா மெசேஜ் கொடுக்கிற...... பரதேசி
ராமசந்திரன்: இன்னும் மெசேஜ் போடுவேன். இப்படியெல்லாம் பேசினீங்கன்னு அனுப்புவேன்.
என்பதோடு ஒரு நிமிடம் 52 விநாடிகள் அடங்கிய உரையாடல் முடிகிறது. ஒரு மாவட்ட கலெக்டரா இப்படி அநாகரீகமாக பேசினார் என, வாட்ஸ் அப்பில் அந்த உரையாடலை கேட்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கலெக்டர் யார், அவரது பெயர் என்ன என்பது குறித்த விவரம் தெரியவில்லை... ஆனால் அந்த கலெக்டரும் கூட இப்போது இந்த உரையாடலை வாட்ஸ்ப்பில் பார்த்துப் படித்திருப்பார் என்று நம்புவோம்.!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications