காஞ்சிக்கு புதிய கலெக்டர்… கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்
சென்னை: திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த லி.சித்ரசேனன் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பை கூடுதலாக மாவட்ட வருவாய் அலுவலர் எம்.சம்பத்குமார் கவனித்து வந்தார். இப்போது புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சியர் மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக கே.பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்களுக்கும் புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.கருணாகரன் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் (முன்பு கோவை மாவட்ட ஆட்சியர்)
அர்ச்சனா பட்நாயக் - கோவை மாவட்ட ஆட்சியர் ( முன்பு நீலகிரி மாவட்ட ஆட்சியர்)
பி.சங்கர் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் (முன்பு வேலூர் மாவட்ட ஆட்சியர்)
ஆர்.நந்தகோபால் - வேலூர் மாவட்ட ஆட்சியர் (முன்பு மதுரை மாநகராட்சி ஆணையர்)
டாக்டர் என்.சுப்பையன் - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் (முன்பு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர்).
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications