பிரசவ வார்டில் புகுந்து கழிப்பறையை எட்டிப் பார்த்த கல்லூரி மாணவர்: மடக்கிப் பிடித்த மக்கள்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே அரசு மருத்துவமனையில் உள்ள பிரவச வார்டில் வாலிபர் புகுந்து கலட்டா செய்ததால் பெண்கள் அலறினர். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள குழித்துறை அரசு மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்குள் வாலிபர் ஒருவர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதை யாரும் கவனிக்கவில்லை என்றும் தெரிகிறது.
பிரசவ வார்டுக்குள் ரகசியமாக புகுந்த வாலிபர் அங்குள்ள கழிவறைக்கு பெண்கள் செல்லும்போது எட்டிப்பார்த்து ரசித்துள்ளார். மேலும் தகாத செயல்களிலும் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கிறார்.
அதனை கழிவறைக்கு சென்ற ஒரு பெண் தற்செயலாக பார்த்து சத்தம் போட்டு அலறினார். இதையடுத்து அங்கு ஓடி வந்த நோயாளிகளின் உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து வருவதாக தெரிவித்தார். மேலும் அவரது அண்ணன் மனைவிக்கு குழித்துறை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதனை பார்ப்பதற்காக அங்கு வந்ததாகவும் கூறினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து
வருகிறார்கள். இந்த சம்பவம் பிரசவ வார்டில் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications