நீட்.. பெசன்ட் நகரில் திடீரென ஒன்றுகூடி போராடிய கல்லூரி மாணவர்கள்! போலீஸ் அதிர்ச்சி
சென்னை : அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மாணவர்கள் திடீரென கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரியலூரில் உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டங்களை தடுத்து நிறுத்தும் விதமாக கல்லூரிகளுக்கு நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்று வாரவிடுமுறை நாள் என்பதால் மாணவர்களின் போராட்டங்கள் பொதுஇடங்களில் நடைபெற்று வருகின்றது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் மாணவர்கள் ஒன்று திரளக் கூடும் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் சில மாணவர்கள் ஒன்று திரண்டனர். அனிதாவின் படத்தை கையில் ஏந்தி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கலைந்த செல்லுமாறு வலியுறுத்தினர், எனினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
தவெக பதவியேற்று 15 நாளானால் என்ன? இப்போதைக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா அதிரடி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications