”நான் நலமுடன் இருக்கிறேன்..” கார் விபத்துக்குள்ளானதா? தவறான தகவல்.. நடிகர் யோகி பாபு ட்வீட்!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே நடிகர் யோகி பாபு கார் விபத்துக்குள்ளானது என்றும், இதில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் இன்று காலையில் தகவல் வெளியானது. இந்த நிலையில் நான் நலமுடன் இருக்கின்றேன். இது எல்லாம் தவறான தகவல் என்று நடிகர் யோகி பாபு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற போது நடிகர் யோகி பாபுவின் கார் விபத்துக்குள்ளானது. நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி ஏறியது. எனினும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று ஒரு தகவல் காலையில் வேகமாக பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இது தவறான தகவல் என்றும் நான் நலமுடன் இருக்கின்றேன் என்றும் நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி மற்றும் நடிகராக யோகி பாபு இருந்து வருகிறார். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிகராகவும், மண்டேலா, எம தர்மன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். சூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் முருகன் கோவிலுக்கு செல்வதையும் யோகி பாபு வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று பெங்களூருக்கு நடிகர் யோகி பாபு காரில் புறப்பட்டார் என்றும், கார் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது காலை 5 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கடந்த போது விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியது.
இதில் தாறுமாறாக சென்ற கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி அப்படியே நின்று விட்டதாகவும், ஆனால் இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரில் இருந்த நடிகர் யோகி பாபுவுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் இதையடுத்து டிரைவர் மற்றும் யோகி பாபு காரில் இருந்து பத்திரமாக வெளியேறி வேறு ஒரு காரை வரவைத்து, அந்த காரில் பெங்களூர் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இதேபோல் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்து விபத்துக்குள்ளான காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் என்றும், காரை அப்பறப்படுத்தும் வரை அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியானது.
நடிகர் யோகி பாபுவின் கார் விபத்தில் சிக்கியதாக வெளிவந்த தகவலால், அவரது ரசிகர்கள் அச்சமடைந்தனர். நல்வாய்ப்பாக அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படாததால் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் கார் விபத்து பற்றி நடிகர் யோகி பாபு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நான் நலமுடன் இருக்கின்றேன். இது தவறான் செய்தி என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். இதனால் யோகி பாபுவின் ரசிகர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications