காவிரியில் கூடுதல் நீரை திறக்க வலியுறுத்தி களமிறங்கிய தமிழக விவசாயிகள்!
தஞ்சாவூர்: காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தஞ்சை, நாகை, திருவாரூரில் வருகின்ற 16ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ சாகுபடியை தொடங்குவதற்கு ஏற்ப தினசரி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீரும், கபிணி அணியில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து திறக்கப்பட்ட நீரானது நாளை மேட்டூர் வந்துசேரும் என்று தெரிகிறது.
ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
இந்நிலையில், காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தஞ்சை, நாகை, திருவாரூரில் வருகின்ற 16ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் காவிரி விவகாரம் தமிழகத்திலும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
போராட்டத்தின் போது, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரில் நடைபெற்ற அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், 13 டி.எம்சி நீர் போதாது என்பதால் கர்நாடகவிடம் கூடுதல்நீரை பெற்று தர தமிழக அரசை வலியுறுத்துவது என்பன உட்பட பல்வேறு தீ்ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலத்தில் வருகின்ற 9 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து எந்த சரக்கு லாரிகளும் அங்கு செல்ல வேண்டாம் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications