இடதுசாரிகள் 18 தொகுதிகளில் போட்டியிட முடிவு: சிபிஐ -9, சிபிஎம்-9
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 18 இடங்களில் இடதுசாரிகள் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.
லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 24ம் தேதி 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறின.

திமுக அழைப்பை மறுத்த இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தன. அதன்படி, தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.
சிபிஐ போட்டியிடும் தொகுதிகள்
இரு கட்சிகளும் தங்களுக்குள் தலா 9 தொகுதிகளாகப் பிரித்துக் கொண்டுள்ளன. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுச்சேரி, கடலூர், திருவள்ளூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவை, மதுரை, வடசென்னை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை, விழுப்புரம், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அதேபோல். போட்டியிடாத 22 தொகுதிகளில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் 17ம் தேதி அன்று வெளியிடப்படுகிறது.
இத்தகவலை அவ்விரு கட்சிகளின் மாநில செயலாளர்களான தா.பாண்டியன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் இணைந்து அறிவித்துள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications