நினைக்கவே பகீர்... சென்னையில் பஸ்ஸில் ஒருமுறை தெற்கு வடக்காக போய்வர குறைந்தது ரூ100 கட்டணம்

சென்னையில் பேருந்தில் ஒருமுறை தாம்பரத்தில் இருந்து ஆவடி சென்று திரும்ப குறைந்தது ரூ100 கட்டணம் என்ற நிலை உருவாகிவிட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

    சென்னை: வரலாறு காணாத வகையில் அரசு பேருந்து கட்டணங்களை தமிழக அரசு ஏற்றியுள்ளது. சென்னையில் பேருந்தில் ஒருமுறை தெற்கே இருந்து வடக்கே சென்றுவர குறைந்தது ரூ100 கட்டணம் என்கிற நிலைமை உருவாகிவிட்டது.

    அரசு போக்குவரத்துக் கழகத்தை முறையாக நடத்தாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புக்குள்ளாக்கிவிட்டனர். இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.

    நீதிமன்றம் தலையீடு

    நீதிமன்றம் தலையீடு

    இதனால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

    கூடுதல் கட்டணம்

    கூடுதல் கட்டணம்

    இந்நிலையில் திடீரென பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இருக்கிறது அரசு. அரசு அறிவித்த கட்டணம் ஒன்றாக இருக்கிறது... பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணமோ பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

    குறைந்தது ரூ100

    குறைந்தது ரூ100

    ரூ9 கட்டணமாக இருந்த இடங்களில் இப்போது ரூ16 வாங்கப்படுகிறது. சென்னையில் தாம்பரத்தில் இருந்து ஆவடி சென்று திரும்ப குறைந்தபட்சம் ரூ75 கட்டணம். இடையில் பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலை வந்தால் குறைந்தது ரூ100க்கு மேல் செலவு செய்ய வேண்டும்.

    பட்ஜெட் எகிரும்

    பட்ஜெட் எகிரும்

    இது அன்றாடம் வேலைக்கு செல்லும் நடுத்தர மக்களை நையப்புடைக்க வைத்திருக்கிறது. வழக்கமாக மாதம் ஒன்றுக்கு ரூ850 பேருந்து கட்டணமாக பட்ஜெட் போட்டவர்கள் இனி ரூ1700 என ஒதுக்கீடு செய்ய வேண்டிய பெரும் துயருக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+