”ஓட்டுப் போட்டீங்களா?” அப்போ 'கொக்கரக்கோ' சிக்கன் கடையில ஒரு கிலோ கறிக்கு 20% தள்ளுபடி!
சென்னை: பொது தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிப்பதை ஊக்குவிக்க எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
"ஓட்டு போடுவது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை " என்பதை விளக்கும் விளம்பர தட்டிகள் , சுவரொட்டிகள், ஊடக விளம்பரங்கள், குறுந்தகடுகள் உள்ளிட்டவற்றை வெளியிட்டது.
இதேபோன்று, சமூக பொறுப்புணர்வுள்ள பல தனியார் நிறுவனங்களும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டன.

வியாபார உத்தியில் நிறுவனங்கள்:
அதே சமயம் சில நிறுவனங்கள் அவற்றின் வர்த்தகத்தை அதிகரித்துக் கொள்ள இந்த பிரசார உத்தியை பயன்படுத்திக் கொண்டுள்ளன.

“மை” இருந்தா தள்ளுபடி:
இந்நிறுவனங்கள் வாக்களித்ததற்கு சான்றாக கை விரலில் உள்ள அடையாள மையை காண்பிப்போருக்கு சலுகை விலையில் பல்வேறு பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளன.

லேக்மே சலூன்:
இந்த வகையில் சென்னையை சேர்ந்த சிகை அழகு நிறுவனமான "லேக்மே சலூன்" கை விரலில் அடையாள மையை காண்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீத சலுகை விலையில் சிகை அலங்காரம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இச்சலுகை வரும் 30 ஆம் தேதி வரை கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நேச்சுரல்ஸ்:
அது போன்று " நேச்சுரல்ஸ்" நிறுவனம் தேர்தல் நாளன்று அதன் அனைத்து விதமான அழகு பராமரிப்பு சேவைகளுக்கான கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கியது.

எப்பீபீ நிறுவனம்:
எப்பீபீ விற்பனையகங்களில் தேர்தல் நாளை முன்னிட்டு நேற்று பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளின் விலையை 10 சதவீதம் குறைத்தது.

கேக் வேர்ல்டு:
"கேக் வேர்ல்டு" நிறுவனம் அதன் அனைத்து வகை கேக்குகளின் விலையில் 15 சதவீதம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜா சிக்கன் கடை:
அயனாவரத்தில் உள்ள ராஜா சிக்கன் அண்டு மட்டன் சென்டர் ஒரு கிலோ கோழிக்கறி விலையில் 20 ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது.

பிராஸ் டேக்ஸ்:
ஆழ்வார்பேட்டையில் உள்ள பிராஸ் டேக்ஸ் நிறுவனம் பலதரப்பட்ட ஆடைகளின் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

ஆன்லைன் சலுகை:
இந்நிறுவனம் கை விரலில் அடையாள மை உள்ளதை படமெடுத்து அனுப்பும் "ஆன்லைன்" வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 15 சதவீத தள்ளுபடி வழங்குகிறது. இச்சலுகை வரும் மே மாதம் 1 ஆம் தேதி வரை கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெக்டொனால்ட்ஸ்:
மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதன் "ராயல் மீல்" பர்கர் வாங்குவோருக்கு வரும் 27 ஆம் தேதி வரை "மெக்ப்ளரி" ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ராம்ராஜ் காட்டன்:
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அடையாள மையை காண்பித்து 1000 ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை வாங்கும் வாடிக்கையாளருக்கு இலவசமாக துண்டை வழங்குகிறது. இச்சலுகை வரும் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு + வியாபாரம்:
இது போன்று இந்தியா முழுவதும் பல நிறுவனங்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் அவற்றின் வர்த்தகத்தை அதிகரித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications