தந்தி டிவியின் கருத்து கணிப்பை விட எக்ஸிட் போலில் எக்ஸ்ட்ரா தொகுதிகளை அள்ளிய திமுக
சென்னை: தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பை ஒப்பிடுகையில் அதனுடைய எக்ஸிட் போலில் அதிமுகவை விட திமுக கூடுதல் தொகுதிகளில் முன்னேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தி டிவி தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அதிமுக 102; திமுக 79; பாமக-1; இழுபறி- 52 தொகுதிகள் என நேற்று அறிவித்திருந்தது. இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பான எக்ஸிட் போலை தந்தி டிவி வெளியிட்டுள்ளது.

இதில் அதிமுக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பைவிட 9 தொகுதிகள் கூடுதலாக 111, திமுக 20 தொகுதிகள் கூடுதலாக 99 தொகுதிகள் முன்னேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் மக்கள் நல கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எக்ஸிட் போலில் உளுந்தூர்பேட்டை, தளி மற்றும் பவானிசாகர் ஆகிய 3 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலுக்கு முந்தைய சர்வேயில் பாமகவுக்கு 1 தொகுதி கிடைக்கும் என்று கூறிய தந்திடிவி எக்ஸிட் போலில் பென்னாகரம் மற்றும் ஆர்க்காடு ஆகிய 2 தொகுதிகளில் அக்கட்சி வெல்லும் என தெரிவித்துள்ளது.
அத்துடன் சர்வேயில் பாஜகவுக்கு 1 தொகுதி கூட கிடைக்காது என கூறியிருந்த தந்தி டிவி தற்போது வேதாரண்யம் தொகுதியில் பாஜக வெல்லும் வாய்ப்பு உள்ளது என கூறுகிறது.
ஒட்டுமொத்தமாக தந்தி டிவியின் தேர்தலுக்கு முந்தைய சர்வேயை தற்போதைய எக்ஸிட் போலுடன் ஒப்பிடுகையில் திமுக அதிகபட்சமாக 20 தொகுதிகளில் முன்னேறியிருப்பது அக்கட்சிக்கு சாதகமாக ஒன்றாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications