ஹெச் ராஜா மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார்!
பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா உள்ளிட்ட 5 பேர் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதநல்லிணக்கத்துக்கு எதிராக பேசிவருவதாக எஸ்டிபிஐ கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
பாஜக தேசிய செயலாளரான ஹெச் ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சிக்கலைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக ஹெச் ராஜா கருத்துகளை கூறி வருகிறார்.

இந்நிலையில் ஹெச் ராஜா மீது எஸ்டிபிஐ கட்சியினர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஹெச் ராஜா உள்ளிட்ட 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவதாக ஹெச் ராஜா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications