சிலை கடத்தல் வழக்கில் கைதான இயக்குநர் வி.சேகருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் வி.சேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம், மேற்கு மாம்பலத்தில் வைத்து 80 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர். சிலைகளை கடத்திய பெரம்பலூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் தனலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், சிலை கடத்தலில் இயக்குநர் வி.சேகருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இயக்குநர் சேகர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இயக்குநர் வி.சேகரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும், ரூபாய் 20 இலட்சம் ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் சத்யா உத்தரவு பிறப்பித்தார்.
இதே வழக்கில் கைதான பெண் நிருபர் மாலதியும் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் சிலை கடத்தல் கும்பல் தலைவனும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியுமான ஜெயக்குமாரை கைது செய்வோம் என சிலை திருட்டு தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications