இறந்த ஆட்டோ ஓட்டுநர் உடலில் தெரிந்த அசைவு.... தேனி அருகே பரபரப்பு- வீடியோ
இறந்துபோன ஆட்டோ ஓட்டுநரின் உடலில் அசைவு தெரிந்ததால் அவர் உயிருடன் இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்து, இல்லை என உறுதியான பின்னர் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை உண்டாக்கியது.
தேனி: இறந்த ஒருவரின் உடலில் திடீரென அசைவு ஏற்பட்டதால் உறவினர்கள் குழப்பமடைந்து இறுதிச்சடங்கை ஒத்திவைத்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனியை அடுத்த அய்யம்பட்டியச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அறிவுச் செல்வம். இவர் நேற்று காலையில் எப்போதும் போல் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது திடேரென சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.உடனே அக்கம்பக்கத்தினர் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அறிவுச்செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். அதையடுத்து அறிவுச்செல்வம் உடலை எடுத்து வந்து உறவினர்கள் அஞ்சலிக்காக குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்துள்ளனர்.
அப்போது அறிவுச்செல்வம் உடலில் சிறு அசைவுகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து மருத்துவரை அழைத்து பரிசோதித்துள்ளனர். அவர் அறிவுச்செல்வம் உடலை மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்தால் பிழைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளனர்.
இதையடுத்து அறிவுச்செல்வம் உடலை மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்த போது மருத்துவர் அவர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். அதனையடுத்து மீண்டும் இறுதிச் சடங்குகள் நடைபெற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் குழப்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications