நெல்லையில் குடியரசு தின விழா குழப்பம்: ஆளே இல்லாததால் பரபரப்பு
நெல்லை: தமிழகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் நெல்லையில் சற்று முன்னதாகவே கொண்டாடப்பட்டதால் விழா நடந்த இடத்தில் பெரும்பாலான நாற்காலிகள் காலியாக கிடந்தன. இது நேர மாற்றத்தால் நடந்த குழப்பத்தால் நேர்ந்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் குடியரசு தினவிழா காலை 8.30 மணிக்கு நடத்தப்படுவது வழக்கம். குடியரசு தின விழா நடக்கும் அண்ணா விளையாட்டு அரங்கம் சாலைகள் முழுவதும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நிறைந்த கூட்டமாக காணப்படும்.

இந்த முறை பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அந்த வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. விழாவுக்கு செல்லும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பள்ளி, மாணவ, மாணவிகள், பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அதே போன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கிலும் கேலரிகள் காலியாக கிடந்தன. பார்வையாளர்கள் அமர்வதற்காக மைதானத்தில் மூன்று இடங்களில் ஷாமியானா பந்தல் போடப்பட்டு சேர்களும் போடப்பட்டிருநதன. ஆனால் அவைகளில் பெரும்பாலானவை காலியாக கிடந்தன.
இந்த தவறு நேர மாற்றத்தால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 8.30 மணிக்கு பதிலாக 8 மணிக்கே கொடியேற்றியதால் பலருக்கும் விபரம் தெரியாமல் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications