திருநாவுக்கரசரை "டம்மி"யாக்க செயல் தலைவர் பதவி... வரிந்து கட்டிக் கிளம்பிய நக்மா, குஷ்பு!
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு செயல் தலைவர் பதவியை உருவாக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. இப்பதவிக்காக நடிகைகள் நக்மா, குஷ்பு வரிந்து கட்டி மோதி வருகின்றனர்.
சென்னை: திமுகவில் செயல் தலைவர் பதவி உள்ளது போல காங்கிரஸிலும் செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோஷம் வலுத்து வருகிறது. இப்பதவிக்கு நடிகைகள் நக்மாவும் குஷ்பும் முட்டி மோதி வருகின்றனராம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக அக்கட்சியிலேயே பல கோஷ்டிகள் களமிறங்கி வேலை செய்து வருகின்றன. நீண்ட யோசனைக்குப் பின்னரே திருநாவுக்கரசை தலைவராக நியமித்ததால் காங்கிரஸ் மேலிடம் கையை பிசைந்து கொண்டிருக்கிறதாம்.
திருநாவுக்கரசருக்கு எதிரான கலகக் குரல்களைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் மேலிடம் எடுத்திருக்கும் முடிவுதான் திமுக பாணியிலான செயல் தலைவர் பதவி. இந்த யோசனையை காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி தலைவர்களும் கூட வரவேற்கின்றனராம்.

ப.சியுடன் ஆலோசனை
முதலில் இதுதொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்திடம் ஆலோசித்துள்ளார் ராகுல். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை நீங்கள் ஏற்றால் இந்த பிரச்சனையே வராது என ராகுல் கூறியுள்ளார். ப.சிதம்பரமும் கூட 2 மாதம் போகட்டுமே என சமாளித்திருக்கிறார்.

செயல் தலைவர் பதவி?
அப்படியானால் திமுக பாணியில் குறுகிய காலத்துக்கு செயல் தலைவர் பதவியை உருவாக்கலாமே என ராகுல் கூறியிருக்கிறார். ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் இதுபற்றி ஆலோசிக்கலாம் என சிதம்பரம் கூறிவிட்டாராம்.

அடித்து கொள்ளும் தலைவர்கள்
இருப்பினும் செயல் தலைவர் ஒருவரை நியமித்து பஞ்சாயத்துக்கு முடிவு கட்டலாம் என நினைக்கிறது காங்கிரஸ் மேலிடம். இதையடுத்து செயல் தலைவர் பதவியை பெறுவதற்கு சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூர், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.

நக்மா, குஷ்பு
அதேபோல் தமிழக அரசியலில் களமிறங்க துடிக்கும் நடிகை நக்மாவும் செயல் தலைவர் பதவிக்கு குறிவைத்திருகிறாராம். நக்மா களமிறங்க நினைக்கும் போது நடிகை குஷ்பு சும்மா இருப்பாரா? இந்த இரு நடிகைகளும் தங்களுக்கான ஆதரவு தலைவர்களுடன் டெல்லி மேலிடத்துக்கு நெருக்கடி தருகிறார்களாம்.. இந்த அக்கப்போர் எப்போது முடிவுக்கு வருமோ?
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி











Click it and Unblock the Notifications