மத்திய பாஜக அரசின் பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்கிறேன்.. நடிகை குஷ்புவின் பேட்டியால் சர்ச்சை!
காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்த போதும் பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிக்கிறேன் என அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை. இதனை பாரதிய ஜனதா கட்சி அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுசிவில் சட்டம் மூலம் இந்துத்துவா செயல்திட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது என பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போதைய மத்திய பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதையும் அக்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு, பொதுசிவில் சட்டம் அவசியம்தான்.. பெண்களுக்கு சுதந்திரம் அவசியம். ஆனால் தேர்தல் அரசியலுக்காக இதை பாஜக கையிலெடுக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார்.
அத்துடன் முத்தலாக் முறை உள்ளிட்டவைகள் குரானில் இல்லை; மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆகையால் அதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கிறாரே என்ற கேள்விக்கு, காலத்துக்கேற்ப மாற்றங்கள் அவசியம்... இந்த சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்... ஆனால் உத்தரப்பிரதேச தேர்தலை வைத்து இதை பாஜக கையிலெடுக்கிறது எனக் கூறினார்.
பொதுசிவில் சட்டத்தை உறுதியாக ஆதரிப்பேன் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியிருக்கும் இக்கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications