இளங்கோவன் ராஜினாமாவை வாபஸ் பெற வலியுறுத்தி காங். தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தி அவர் வீட்டு முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. அத்துடன் இளங்கோவனின் செயல்பாடுகள் மீது காங்கிரஸ் மேலிடம் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தது.

Cong workers attempt immolation

டெல்லியில் 3 நாட்கள் முகாமிட்டும் தம்மை சந்திக்க இளங்கோவனுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுமதி தரவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்த விவகாரம் வெளியானது.

இதனைத் தொடர்ந்து புதிய தலைவரை அறிவிப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே தம்முடைய ஆதரவாளர்களுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை நடந்து கொண்டிருந்த போதே அவரது வீட்டுக்கு வெளியே 2 காங்கிரஸ் தொண்டர்கள், ராஜினாமாவை இளங்கோவன் வாபஸ் பெற வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் இளங்கோவன் வீடு முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இளங்கோவன் வீட்டு முன்பாக காங். தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங். கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் இளங்கோவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+