ஏற்காடு தேர்தல்.. திமுகவை ஆதரிக்காமல் 'நரசிம்மராவாக மாற' காங்கிரஸ் முடிவு!
சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்காமல் 'நரசிம்மராவை போல' மவுனம் சாதிக்க காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுகவைப் பொறுத்தவரையில் மறுமலர்ச்சி திமு, சமத்துவ மக்கள் கட்சியைத் தவிர அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கோரி கடிதம் அனுப்பி வைத்தது.
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிடமும் திமுக ஆதரவு கோரியிருந்தது. அதாவது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக அணியில் இணைவதற்கான வாய்ப்பை உருவாக்கவே திமுக இந்த நிலையை கடைபிடித்ததாக கூறப்படுகிறது.
இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதுடன் திமுக பாணியிலேயே தாங்களும் கூட்டணி வியூகம் வகுக்க வேண்டும் என்று மேலிடத்தை தமிழக காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியிருக்கின்றனர்.

காங்கிரஸ், பாஜகவுக்கு திமுக வாசலை திறந்து வைத்திருப்பது போல காங்கிரஸும் திமுக- அடிமுக இரண்டுக்குமே வாசலை திறந்து வைக்கும் வகையில் முடிவெடுக்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியினரின் நிலை.
தற்போதைய ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தால் அதிமுகவுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்துவிடுவதே நல்லது என்பது காங்கிரஸின் நிலைப்பாடு.
திமுகவினரும் கூட காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தாலே போதும் என்ற நிலையில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஆக நரசிம்மராவைப் போல மவுனமாக இருக்க முடிவு செய்துவிட்டது காங்கிரஸ் கட்சி!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications