குளச்சல் தொகுதியில் மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான பிரின்ஸ், மீனவ மக்களின் எதிர்ப்பால் விரட்டி விடப்பட்டார்.
குளச்சல் தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகிப்பவர் பிரின்ஸ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கு திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் மீனவ கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரின்ஸ் சென்றபோது மீனவ குடும்பத்தினர், அவரது பிரசார ஜீப்பை சூழ்ந்து கொண்டு, பேச கூடாது, திரும்பி போ என்று கூச்சலிட்டனர்.
பிரின்ஸ் பேச்சை நிறுத்தியபோதிலும் ஊரை விட்டு வெளியே போகுமாறு மீனவர்கள் கூறியதோடு, அவரது ஜீப்பை கைகளால் அடிக்க தொடங்கினர்.
இதையடுத்து தம்பிகளா.. உங்கள் கோரிக்கைகளை ஏற்று நான் ஊரை விட்டு வெளியே போகிறேன் என்று கூறிய பிரின்ஸ் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
கடந்த ஐந்தாண்டுகளில் மீனவர் பிரச்சினைக்கு பிரின்ஸ், செவிசாய்க்கவில்லை என்பது அம்மக்களின் கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications