பல வருடங்களுக்கு பிறகு கருணாநிதியை சந்தித்த ராகுல் காந்தி! இதுவரை தவிர்த்தது ஏன்?

கருணாநிதியை நீண்ட காலத்திற்கு பிறகே இன்று சந்தித்துள்ளார் ராகுல் காந்தி. இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதை தவிர்த்து வந்த காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று நீண்ட காலத்திற்கு பிறகு முதல் முறையாக அவரை சந்தித்தார்.

காங்கிரஸ் துணை தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதை திட்டமிட்டே தவிர்த்து வந்தார்.

இவ்வாண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின்போது கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் கூட கருணாநிதியை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலினுடன், ராகுல் காந்தி இணைந்து பிரசாரம் செய்தாரே தவிர கருணாநிதியை சந்திக்கவில்லை.

ஜெயலலிதாவை பார்க்க சென்றார்

ஜெயலலிதாவை பார்க்க சென்றார்

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது சென்னை வந்து அப்பல்லோ டாக்டர்களிடம் நலம் விசாரித்தார் ராகுல் காந்தி. அப்போது கூட ராகுல் காந்தி, கருணாநிதியை சந்திக்கவில்லை.

கூட்டணி சர்ச்சை

கூட்டணி சர்ச்சை

கூட்டணி கட்சியின் தலைவர், மூத்த அரசியல்வாதியான கருணாநிதியை ராகுல் காந்தி சந்திக்காமல் சென்றது, கூட்டணி மாறுவதற்கான அச்சாரமாக இருக்கலாம் என அப்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

ஹலோ கூறிய ராகுல் காந்தி

ஹலோ கூறிய ராகுல் காந்தி

இந்த நிலையில், தற்போது கருணாநிதியை மருத்துவமனையில் வைத்து ராகுல் காந்தி சந்தித்துள்ளார். அவருக்கு 'ஹலோ' சொல்லியதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ரொம்ப காலம் முன்பு

ரொம்ப காலம் முன்பு

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், "2011ல் டெல்லியில் சோனியா காந்தியை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ராகுல் காந்தி அரசியலில் பெரிதாக அறியப்படவில்லை. அந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி கருணாநிதியை சந்தித்திருக்கலாம். அதன்பிறகு, இப்போதுதான் ராகுல் காந்தி, கருணாநிதியை சந்தித்திருக்கிறார்.

2ஜிதான் காரணமா?

2ஜிதான் காரணமா?

2ஜி ஊழல் வழக்கு வந்த பிறகுதான் ராகுல் காந்தி இவ்வாறு நடந்து கொண்டார் என்று நினைக்கிறேன். அப்போது ராகுல் காந்தி அரசியலில் எழுச்சி பெற தொடங்கிய காலகட்டம். எனவே திட்டமிட்டே கருணாநிதியை தவிர்த்து வந்தார். தேசிய அளவில் 2ஜி ஊழல் விவகாரம் பெரிதாக கிளம்பியுள்ளதால் ராகுல் காந்தி இவ்வாறு செய்தார் என்றே கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+