தமிழக காங். தலைவராக திருநாவுக்கரசரை நியமிக்க கூடாது.. 38 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசரை நியமிக்க கூடாது என்று 38 மாவட்ட காங். தலைவர்கள் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த சில வாரங்கள் முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே, தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், வசந்தகுமார், டாக்டர் ஜெயக்குமார், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன், நடிகை குஷ்பு ஆகியோர் தலைவர் பதவி ரேசில் உள்ளனர்.
திருநாவுக்கரசர் அல்லது ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அதிலும் திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 38 மாவட்ட தலைவர்கள், அக்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், திருநாவுக்கரசரை தலைவராக நியமிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருநாவுக்கரசர் எந்த கட்சிக்கும் நம்பகத்தன்மையில்லாதவர் என்று குற்றம் சாட்டியுள்ள அந்த தலைவர்கள், இப்படிப்பட்டவர் கரங்களில் காங்கிரஸ் கட்சி போகக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் காலதாமதம் ஆகிவருவதற்கும் அவர்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.
இளங்கோவன் இந்த கடித விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக பொருமுகிறார்கள் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications