For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹய்யா.. ஜி.கே. வாசன் ஹோகயா... துள்ளுகிறதாமே காங். மேலிடம்!

|

சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களை ஒரு வழியாக கப்சிப்பாக்கி விட்டதாக குதூகலித்து வருகிறதாம் காங்கிரஸ் மேலிடம். இப்படி ஒரு தகவல் பரவிக் கிடக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வி்ல் கடைசி நேரத்தில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்து வாசன் தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கொடுத்த வேட்பாளர் பட்டியலில் அதிரடியாக கடைசி நேரத்தில் சில புதியவர்களைச் சேர்த்து வாசன் தரப்பை ஆட வைத்து விட்டது காங்கிரஸ் கட்சி. இதனால்தான் வாசன் தரப்பினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட சுத்தமாக ஆர்வம் காட்டாமல் முடங்கிக் கிடக்கிறார்களாம்.

யாருமே கூப்பிடவில்லை

யாருமே கூப்பிடவில்லை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க யாரும் முன்வரவில்லை.

கேவலப்படுத்திய திமுக

கேவலப்படுத்திய திமுக

திமுக தங்களது பொதுக் குழுவிலேயே காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என தீர்மானம் நிறைவேற்றி காங்கிரஸ் கட்சியை கேவலப்படுத்தியது.

ஆனாலும் நம்பிய தலைவர்கள்

ஆனாலும் நம்பிய தலைவர்கள்

ஆனால் , திமுகவுடன் உறுதியாக கூட்டணி மலர்ந்து விடும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பினர்.

தேமுதிகவுக்காக அலைந்த வாசன்

தேமுதிகவுக்காக அலைந்த வாசன்

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தேமுதிகவை கொண்டு வர மத்திய அமைச்சர்ஜி.கே.வாசன் மறைமுகமாக சில வேலைகளை செய்தார். ஆனால் டெல்லி தலைமை அதை கண்டு கொள்ளவே இல்லை.

தனிக் கட்சிக்கும் திட்டமிட்ட வாசன்

தனிக் கட்சிக்கும் திட்டமிட்ட வாசன்

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறி தனிக் கட்சிதுவங்கப் போவதாகவும், திமுக மற்றும் அதிமுக அவருக்கு 5 சீட்டுகள் ஒதுக்க தயராக இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

கண்டு கொள்ளாத காங். தலைமை

கண்டு கொள்ளாத காங். தலைமை

இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை கூட்டணி குறித்த முடிவு, தேர்தல் வியூகம் போன்ற பல்வேறு செயல்பாடுகள் காரணமாக பின்தங்கியது.

தோல்வி கன்பர்ம்ட்.. பின்வாங்கிய வாசன்

தோல்வி கன்பர்ம்ட்.. பின்வாங்கிய வாசன்

தோல்வி உறுதி என்பதால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பின்வாங்கினார். அதே போல அவரது பெரும்பானமையான ஆதரவாளர்களும் சீட் கேட்டு முன்வரவில்லை. தேர்தலே வேண்டாம் என சில தலைகள் ஒதுங்கி ஓரமாக உள்ளாக கூறப்படுகின்றது.

அப்பாடா அடக்கிட்டோம்ய்யா..

அப்பாடா அடக்கிட்டோம்ய்யா..

இதனை கண்டு டெல்லி மேலிடம், தமிழகத்தில் வாசன் தரப்பை அடக்கிவிட்டோம். இனி தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஆபத்து இல்லை என பெருமூச்சு விட்டு வருகிறதாம்.

சொந்த வீட்டுக்கே கொள்ளியா.. என்னங்கானும் இது

சொந்த வீட்டுக்கே கொள்ளியா.. என்னங்கானும் இது

இதை மோப்பம் பிடித்த வாசன் தரப்பு , சொந்த வீட்டுக்கே கொள்ளி வைப்பது காங்கிரஸ் க்டசிக்கு தான் முதலிடம் என நொந்து போய் கூறுகின்றனர்.

English summary
Sources in Congress say that the party high command is happy over the sidelining of Vasan group in the LS election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X