மயிலாப்பூர் உள்பட சென்னையில் காங்கிரஸ் 4 தொகுதிகளில் போட்டி
சென்னை: சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பெயர்களையும் திமுக அறிவித்துள்ளது. இதில் சென்னையில் அக்கட்சிக்கு 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
சென்னையில் மயிலாப்பூர், ராயபுரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய நான்கு தொகுதிகள் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளன. இதில் மயிலாப்பூரில் குஷ்பு போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
தி.மு.கழக கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரம்.#DMK2016 pic.twitter.com/pLJawPo6Ad
— KalaignarKarunanidhi (@kalaignar89) April 7, 2016
அதேபோல பாரம்பரியமாக காங்கிரஸ் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியும் கிடைத்துள்ளது. அதில் யசோதா போட்டியிடலாம். இதேபோல திருத்தணியும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளது.
எதிர்பார்த்தது போல செய்யாறு, ஓசூர், தாராபுரம் ஆகியவையும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காரைக்குடியும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளது. இது போக சிவகங்கை, காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், பட்டுக்கோட்டை ஆகியவையும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையத்தில் இளங்கோவன் போட்டியிடலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் கிடைத்துள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications