For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் அதை காங்கிரஸ் எதிர்க்கும்: திருநாவுக்கரசர் எச்சரிக்கை

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியின் ஆன்மீக அரசியல்- திருநாவுக்கரசர் என்ன சொல்கிறார்?- வீடியோ

    சென்னை : அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினி, எந்த வகையில் பாஜகவை ஆதரித்தாலும் அதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் அமைப்புகள் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் பலியாகினார். இதைத் தொடர்ந்து அங்கு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

     Congress oppose Rajini if he Supports BJP says Thirunavukkarasar

    இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய திருநாவுக்கரசர், பாஜக ஆட்சியில் ஆதிதிராவிட மக்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அவர்களின் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. அதேபோல தமிழகத்திலும் அவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை குறைக்கப்பட்டு உள்ளது. இவை கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பேசினார்.

    மேலும், தமிழகத்தில் தற்போதைய செயல்பாடற்ற ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும், திமுகவோடு காங்கிரஸ் கைகோர்த்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் . தனித்தோ கூட்டணி வைத்தோ அவர் எப்படி வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கலாம். ஆனால், அவர் எந்த வகையில் பாஜகவை ஆதரித்தாலும் காங்கிரஸ் கட்சி அதை எதிர்க்கும் என்று திருநாவுக்கரசர் குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    Congress oppose Rajini if he Supports BJP in any form says Tamilnadu Congress Committee chief Thirunavukkarasar. He also condemns central Government for not taking any actions against attack on Dalit people in Maharastra .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X