சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.. மேடையில் முன் வரிசையில் குஷ்பு, நக்மா !
ராகுல்காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்ட மேடையில் குஷ்புக்கும், நக்மாவுக்கும் முன் வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது.
சென்னை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குஷ்பு, நக்மாவுக்கு முன் வரிசையில் இருக்கை அளித்திருந்தது காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மூன்று முறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் தமிழக முன்னாள், இன்னாள் தலைவர்கள் ஒன்று கூடி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குஷ்பு, நக்மா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சியின் மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசரின் அருகில் அமர்ந்திருக்க, மேடையில் அனைவருக்கும் முன்பாக நக்மாவிற்கும், குஷ்புவிற்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், யசோதா உள்ளிட்டோருக்கு பின்வரிசையிலே இருக்கை அளிக்கப்பட்டது காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications