இங்கிட்டு வாசன்... .அங்கிட்டு திருநாவுக்கரசர்... திமுகவில் ஒரே மல்லுக்கட்டு!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தமாகாவும் இடம்பெற முயற்சித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறுவழியில்லாமல் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தமாகா.
இரட்டை இலை சின்னத்தில்தான் தமாகா வேட்பாளர்கள் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை விதித்தது. இதனால் அதிமுகவிடம் இருந்து விலகி தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி கட்சியின் 2-ம் கட்ட தலைவர்கள் பலரும் திமுக, அதிமுகவில் ஐக்கியமாகினர்.

லாபி ஒர்க் அவுட் ஆகலை
சட்டசபை தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் காங்கிரஸில் மீண்டும் ஐக்கியமாகிவிடுவது என முயற்சிகளை மேற்கொண்டார் ஜிகே வாசன். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சிக்னல் தரவில்லை. வாசன் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்... இதனால் வாசனின் எந்த ஒரு லாபியுமே அவருக்கு கை கொடுக்கவில்லை.

காங்கிரஸுக்கு எதிராக ஸ்டாலின்
சட்டசபை தேர்தலின் போதே காங்கிரஸுக்கு குறைவான இடம்தான் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர் முக ஸ்டாலின். ஆனாலும் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. ஆகையால் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸுக்கு பதில் தமாகாவை கூட்டணிக்கு கொண்டு வருவதில் மும்முரம் காட்டினார் ஸ்டாலின்.

கருணாநிதி நிலைப்பாடு இது
ஆனால் காங்கிரஸும் இருக்கட்டும்... தமாகாவும் இருக்கட்டும் என்பது திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடு. இதனால்தான் ஸ்டாலின்-வாசன் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போதே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரை கருணாநிதியும் சந்தித்து பேசியிருக்கிறார்.

காங்கிரஸில் எதிர்ப்பு
இச்சந்திப்புக்குப் பின்னர் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று திருநாவுக்கரசர் அறிவித்தார். இதற்கு காங்கிரஸில் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தை எதிர்த்து கட்சி தொடங்கிய வாசனுடன் எப்படி ஒரே கூட்டணியில் இருக்க முடியும் என காங்கிரஸில் அதிருப்தி குரல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி நெருக்கடியை எப்படி சமாளிப்பாரோ திருநாவுக்கரசர் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications