டிவி, ரேடியோவில் பிரசாரம்.. அதிமுக, திமுகவுக்கு 40, தேமுதிக, பாமகவுக்கு 35 நிமிடம்!
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக உள்பட 4 முக்கியக் கட்சிகளுக்கு நேரம் தரப்பட்டுள்ளது.
இதில் அதிமுக, திமுகவுக்குத்தான் அதிக நேரம் தரப்பட்டுள்ளது.

ஆளுக்கு 40 நிமிடம்
இந்த இரு கட்சிகளுக்கும் தலா 40 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

8 தவணைகளில் பயன்படுத்தலாம்
இந்த 40 நிமிடங்களையும் 8 தவணைகளாகப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு முறையும் 5 நிமிடம்
இந்த 8 தவணைகளையும் ஒவ்வொரு தவணையும் 5 நிமிடத்திற்குப் பயன்படுத்தலாம்.

பாமக, தேமுதிகவுக்கு ஆளுக்கு 35 நிமிடம்
இதேபோல பாமக மற்றும் தேமுதிகவுக்கு தலா 35 நிமிடங்கள் தரப்பட்டுள்ளன. இவர்கள் இதை 7 தவணைகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரங்கசாமி கட்சிக்கு 35 நிமிடம்
புதுச்சேரியைச் சேர்ந்த அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் 35 நிமிடம் தரப்பட்டுள்ளது. இவர்களும் 7 தவணைகளாக இதைப் பயன்படுத்தலாம்.

எப்பப் பேசலாம்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கலாம். வாக்குப் பதிவு நடைபெறுவதற்குள்ளாக இதை முடித்துக் கொள்ள வேண்டும்.

குலுக்கி எடுப்பார்கள்
நேரம் ஒதுக்கீடு, எந்தெந்தக் கட்சி என்று பேசுவது என்பது குலுக்கல் முறையில் முடிவு செய்ய்படுமாம்.

காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டுகள்
இந்த மாநிலக் கட்சிகள் போக தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டோருக்கும் நேரம் ஒதுக்கீடு செய்ய்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications