சென்னை மாநகராட்சித் தேர்தல்… 91வது வார்டில் கக்கனின் உறவினர் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தலில் 91வது வார்டில் கக்கனின் உறவினர் கிருஷ்ணவேணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் இம்மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை இன்று அதன் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டார். அதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 14 காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன.
இதில், 91வது வார்டில் முன்னாள் அமைச்சர் கக்கனின் உறவினர் கிருஷ்ணவேணி போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications