திருச்சி வந்தார் ராகுல்காந்தி… காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு
திருச்சி: காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திருச்சி வந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்றினார் ராகுல்காந்தி.
ஏராளமான காங்கிரஸ் தொண்டர் பங்கேற்ற பிரமாண்டமான கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளையும் சந்தித்து உரையாடினார்.

திருச்சி வந்தார் ராகுல்
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று பிற்பகலில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
குண்டு துளைக்காத கார் மூலம் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு வந்த ராகுல்காந்தி கொட்டும் மழையில் உற்சாகமாக உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.ராகுல்காந்தி திருச்சி வருகையையொட்டி பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து மத்திய சிறப்பு பாதுகாப்பு படை உதவி ஐஜி ராவத் தலைமையிலான 16 அதிகாரிகள் திருச்சியில் முகாமிட்டுருந்தனர்.

2500 போலீசார்
திருச்சி ஏர்போர்ட் முதல் விழா நடை பெறும் பொன்மலை ஜிகார்னர் வரை மத்திய சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 2500 போதிருச்சி ஏர்போர்ட் முதல் விழா நடைபெறும் பொன்மலை ஜிகார்னர் வரை மத்திய சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக திருச்சி மண்டலத்தில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக திருச்சி மண்டலத்தில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுடன் சந்திப்பு
பொதுக்கூட்டத்துக்கு பின் விமான நிலையம் எதிரே ஜே.கே.நகருக்கு செல்லும் பாதையில் லூர்து நகரில் உள்ள பண்ணை இல்லத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 200 பேரை ராகுல்காந்தி சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார் ராகுல்காந்தி
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications