இடஒதுக்கீடு முறையாக பின்பற்றாத உள்ளாட்சித் தேர்தல் ரத்து- காங்கிரஸ் வரவேற்பு
சென்னை: தமிழகத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதற்கு காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
தமிழகத்தில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில், நேற்று வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே திமுக அமைப்புச் செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தொடக்கத்தில் இருந்தே சரியாக செயல்பட வில்லை. இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதில் ஒரு ரகசிய போக்கையே தமிழக அரசு கடைபிடித்து வந்தது. எஸ்டி, எஸ்சி, பெண்களுக்கான இடங்கள் எது எது என்பது முறையாக வரையறுத்து வெளியிடப்பட வில்லை. குறிப்பாக பெண்களுக்கு இந்த தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் பெண்களுக்கான இடங்கள் எது என்பது சரியாக தெரியப்படுத்தவில்லை. மேலும், திருச்சி மாநகராட்சி பொது பிரிவுக்கு என்று முதலில் சொல்லப்பட்டது. பின்னர் பெண்களுக்கான இடம் என்று மாற்றிச் சொல்லப்பட்டது. இப்படி மாற்றி மாற்றி சொல்லி ஒரு குழப்ப நிலையில்தான் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டது.
எஸ்சி, எஸ்சி, பெண்கள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வெற்றிக்காக பயன்படுத்த நினைத்ததே தவிர அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமையாக கருதவில்லை. எனவே, சென்னை ஐகோர்ட் சொல்லி இருப்பது வரவேற்கத் தக்க ஒன்று என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications