சங்கு ஊதி… ஷாக்கடித்த மைக்… ஜெர்க் ஆன ஈவிகேஎஸ் இளங்கோவன்
திருச்சி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருச்சியில் பிரசாரம் செய்யும் போது சங்கு ஊதி, மைக் ஷாக் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் ஜெர்க் ஆன இளங்கோவன் ஒருவழியாக சமாளித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் கூடிய கூட்டம் அவரை உற்சாகப்படுத்தவே ஊதிய சங்கினை பொருட்படுத்தாமல் பேசி வாக்கு சேகரித்தார்
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சியில் போட்டியிடும் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டமானுக்கு ஆதரவாக வாக்கு திரட்ட காந்தி மார்க்கெட் பகுதியில் புதன்கிழமை பிரச்சாரம் செய்தார்.

தடுமாறிய ஈவிகேஎஸ்
பிரச்சார வண்டியில் வளைந்து, நெளிந்து ஒருவித தடுமாற்றத்துடன்தான் ஏறினார். மைக்கைப் பிடித்து பேசத் தொடங்கினார்.

ஊதிய சங்கு
தேர்தல் நேரத்தில், "ஊ... ஊ..."என்று சத்தமிட்டது மாநகராட்சி சங்கு. அது ஊதி முடிக்கும் வரை இளங்கோவன் காத்திருந்தார்.

சாருபாலா போட்ட சங்குதான்
"பேசுற நேரத்துல சங்கு ஊதுதேன்னு யாரும் தப்பா நினைக்கக் கூடாது. இந்த சங்குகூட நம்ம வேட்பாளர் சாருபாலா மேயராக இருந்தப்போ அமைச்சது.

தினம் 8 மதிக்கு ஊதும்..
தினசரி 'டாண்'னு 8 மணிக்கு சங்கு ஊதும்"என்று சொல்லி சமாளிக்கவே வெட்கத்தில் சிரித்தார் வேட்பாளர் சாருபாலா.

ஷாக்கடித்த மைக்
பேசிக் கொண்டிருக்கும் போதே இளங்கோவன் விருட்டென்று மைக்கில் இருந்து கையை எடுத்தார். "ஷாக் அடிக்குது.. பாருங்க"என்று சொல்லி அருகே இருந்தவரிடம் கொடுத்தார்.

துண்டு சுற்றி பிரசாரம்
கட்சித் துண்டை அவர் இன்சுலேஷன் டேப் போல சுற்றி மீண்டும் இளங்கோவனிடம் கொடுக்க, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

கரண்ட் இருக்குப்பா
"வியப்பா இருக்கு. கரன்ட் இருக்கு போல. அதான் ஷாக் அடிக்குது"என்று இன்னொரு பஞ்ச் கொடுத்தார்.

நல்ல கூட்டம்பா...
பிரசாரத்தில் அதிமுக, திமுகவை வறுத்தெடுத்த இளங்கோவன், இவ்ளோ கூட்டத்தைப் பார்த்ததே மகிழ்ச்சி" எல்லோரும் கை சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க என்று கூறி விடைபெற்றார். எப்படியோ சாருபாலாவுக்கு சங்கு ஊதாமல் இருந்தால் சரிதான் என்று கலைந்தனர் வாக்காளர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications