”தமிழின எதிரி காங்கிரஸை நாடு கடத்த வேண்டும்”கொ.ம.க ஈஸ்வரன்
சென்னை: தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீசியஸ் போன்ற நாடுகள் ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மியான்மர் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்திக்க கூடாது என்று ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர், ராஜபக்சேவை சந்தித்து தமிழர்களுக்கு எதிரானது.
ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு வேறு பல நாடுகள் ஆதரவு கொடுக்க இருந்த நிலையில் இந்திய பிரதமரின் சந்திப்பு அந்த தீ்ர்மானத்தை நீர்த்துப்போக காங்கிரஸ் செய்த சதித்திட்டமே என்று எண்ணத் தோன்றுகிறது.
மற்ற நாடுகள் எல்லாம் மனிதாபிமானத்தோடு இலங்கைக்கு எதிராக திரும்பி இருக்கும் நிலையில் மத்திய காங்கிரஸ் அரசு மட்டும் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்து இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கி்ரசை இந்த நாட்டை விட்டே மக்கள் துரத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்று கூறியுள்ளார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications