வைகை அணை அருகே பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்
தேனி: வைகை அணை அருகே பாலம் கட்டுமாணப் பணியில் ஈடுபட்ட வடநாட்டு தொழிலாளர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார்.
வைகை அணை அருகே வைகையாற்றில் புதிய பாலம் கட்டுமாணப் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இப்பால பணி ஒப்பந்தத்தை திண்டுக்கல் நிறுவனம் எடுத்துள்ளது. இதில் ஒரிஸாவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இக்குழுவை சேர்ந்த முனிராம் (38) என்ற இளைஞர் வெள்ளிக்கிழமை காலை பாலப்பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வலதுகாலில் முழங்காலுக்கு கிழே தீடீரென பொருள் வந்து தாக்கியதால் காயமடைந்தாராம்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை வைகை அணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இது தோட்டா போன்று உள்ளது என கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அறுவைசிகிச்சை செய்ததில் காலில் துப்பாக்கி தோட்டா எடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வைகை அணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். வைகை அணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் காலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாவை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications