கோவை சிங்காநல்லூரில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்.. சட்டசபையில் முக்கிய தகவல்
சென்னை: கோவை சிங்காநல்லூரில் 28 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கும் திட்டத்திற்கான மதிப்பீடு குறிப்புகளை, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுடன் ஒப்பிட்டு ஆலோசகர்கள் முன்மொழிந்துள்ளனர் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. துறை வாரியாக கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டு, விவாதங்கள் நடந்து வருகிறது. அந்தவகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.

2024 மக்களவைத் தேர்தலின்போது, கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுகவைச் சேர்ந்தவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, வாக்குறுதி அளித்தபடி, கோவையில் கிரிக்கெட் அரங்கம் அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியது திமுக அரசு. ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை வளாகத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக்கூறுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை மைதானத்தின் 20.72 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நில மாறுதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றித் தருமாறு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையருக்கு கோவை தெற்கு தாசில்தார் கடிதம் எழுதினார். அதன்படி அந்த நிலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தான் கோவை கிரிக்கெட் அரங்கம் தொடர்பான முக்கிய அப்டேட், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியாகியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் தொடர்பாக மதிப்பீடு குறிப்புகள் முன்மொழியப்பட்டது. இந்தியா, சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுடன் ஒப்பிட்டு ஆலோசகர்கள் மதிப்பீடு குறிப்புகளை முன்மொழிந்துள்ளனர். சிங்காநல்லூரில் 28.36 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications