Breaking News Live: தேசிய திரைப்பட விருது விழா- ஜனாதிபதி பங்கேற்கவில்லை! ஸ்மிருதிக்கு எதிர்ப்பு!
கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது திமுகவின் உரிமை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Tamilnadu
oi-Vishnupriya
By Lakshmi Priya
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார். மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது தருவார் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு விருதாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விழாவைப் புறக்கணித்தனர் அத்துடன் டெல்லியில் போராட்டம்மும் நடத்தினர்.
இன்றைய விழாவில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியே விருதுகளை வழங்கினார்.
May 03, 2018, 8:16 pm IST
பீகார் மாநிலத்தில் மோதிஹாரி பகுதியில் பேருந்து தீ விபத்து: 27 பேர் பலி
May 03, 2018, 7:20 pm IST
திண்டுக்கல் மாவட்டத்தில் 2-வது நாளாக இரவில் தொடர் மழை
May 03, 2018, 7:20 pm IST
வேலை வாய்ப்பு என்ற பெயரில் மாசு ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கே எதிர்ப்பு - கமல்
May 03, 2018, 7:20 pm IST
வேலை வாய்ப்பு வழங்கும் ஆலைகளுக்கு மக்கள் நீதி மையம் எதிரானது அல்ல: கமல்
May 03, 2018, 6:04 pm IST
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு
May 03, 2018, 4:55 pm IST
பாதுகாப்பு துறை அமைச்சர் பற்றி மோடி கர்நாடகாவில் பேசியது சர்ச்சையாகியுள்ளது
May 03, 2018, 4:55 pm IST
கர்நாடக பெண்ணை பாதுகாப்பு துறை அமைச்சராக நியமித்து இருக்கிறேன் - மோடி
May 03, 2018, 4:55 pm IST
கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினரானவர் நிர்மலா சீதாராமன் - மோடி
May 03, 2018, 4:54 pm IST
தமிழ் பெண்ணை கன்னடர் என்றதால் கன்னடர்கள் டிவிட்டரில் கொந்தளிப்பு
May 03, 2018, 4:41 pm IST
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா- ஜனாதிபதி பங்கேற்கவில்லை
May 03, 2018, 4:20 pm IST
டெல்லியில் தேசிய திரைப்பட விருதாளர்கள் போராட்டம்
May 03, 2018, 4:20 pm IST
ஸ்மிருதி இரானி விருது வழங்க கடும் எதிர்ப்பு
May 03, 2018, 4:20 pm IST
64 ஆண்டுகால நடைமுறையை மாற்ற கூடாது என முழக்கம்
May 03, 2018, 4:20 pm IST
விருதாளர்கள் போராட்டத்தால் தேசிய திரைப்பட விருது விழா தொடங்குவதில் தாமதம்
May 03, 2018, 3:03 pm IST
வங்கி அலுவலக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
May 03, 2018, 3:03 pm IST
வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
May 03, 2018, 3:03 pm IST
தேனியில் உள்ள கனரா வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி
May 03, 2018, 2:53 pm IST
ஜெ. மரணத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை- இயற்கை மரணம்தான் - திவாகரன்
May 03, 2018, 2:53 pm IST
திவாகரனிடம் 3 முறை மணிநேர விசாரணை நடைபெற்றது
May 03, 2018, 2:53 pm IST
2 முறை அப்பல்லோ வந்த போது ஜெ.வை பார்க்கவில்லை
May 03, 2018, 2:53 pm IST
ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜரான திவாகரன் பேட்டி
May 03, 2018, 2:53 pm IST
ஜெ. சிகிச்சையின் போது 2 முறை அப்பல்லோ வந்தேன்
May 03, 2018, 2:47 pm IST
எந்த சூழலிலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது- பாரதிராஜா
May 03, 2018, 2:47 pm IST
தமிழர்கள் கண்ணியமானவர்கள்
May 03, 2018, 2:47 pm IST
தமிழகத்துக்கு தமிழன் மட்டும் தலைவனாக முடியும்
May 03, 2018, 2:47 pm IST
தமிழகம் பாலைவனமாக்கப்படுகிறது
May 03, 2018, 2:47 pm IST
தமிழகத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன
May 03, 2018, 2:46 pm IST
கடலூரில் இயக்குநர் பாரதிராஜா பேச்சு
May 03, 2018, 2:38 pm IST
11 பேரை தவிர மற்றவர்களுக்கு ஸ்மிருதி ராணி விருது தருவார் என தகவல்
May 03, 2018, 2:38 pm IST
ஸ்மிருதி ராணியிடம் இருந்து விருது பெற முடியாது என விருதாளர்கள் அறிவிப்பு
READ MORE
10:17 AM, 3 May
காவிரி விவகாரத்தில் செய்த தவறை மறைக்கவே திமுக கறுப்புக் கொடி காட்டுகிறது - தமிழிசை
10:17 AM, 3 May
தமிழகத்துக்கு திமுக செய்ததை பட்டியலிட ஸ்டாலின் தயாரா - தமிழிசை
10:17 AM, 3 May
தமிழகத்துக்கு பாஜக அரசு செய்ததை பட்டியலிட நான் தயார்- தமிழிசை
10:17 AM, 3 May
ஆன்லைன் சேர்க்கைக்கான பதிவு இன்று முதல் மே 30 வரை நடைபெறும் -அண்ணா பல்கலைக்கழகம்
10:17 AM, 3 May
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது
10:17 AM, 3 May
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இப்படி புயல் வீசுகிறது
10:17 AM, 3 May
புயலுடன் சேர்த்து மழையும் பெய்வதால் மக்கள் அவதி
10:17 AM, 3 May
வெறும் 10 நிமிடத்தில் வெப்பநிலை மொத்தமாக குறைந்தது
10:17 AM, 3 May
புழுதிப் புயலால் டெல்லி வெப்பநிலை 33 டிகிரியில் இருந்து 22 டிகிரியாக குறைந்தது
10:17 AM, 3 May
நேற்று மாலை தொடங்கிய புயல் அதிகாலை வரை வீசியது
10:17 AM, 3 May
டெல்லியில் பல இடங்களில் திடீரென்று புழுதிப் புயல்
10:18 AM, 3 May
இதனால் காவிரி குறித்து பிரதமரிடம் தனியாக பேசுவது சரியாக இருக்காது - முதல்வர் பழனிசாமி
10:18 AM, 3 May
அனைத்துக்கட்சி தலைவர்களையும் பிரதமர் அழைத்து பேசுவார் என நம்பிக்கை உள்ளது
10:18 AM, 3 May
காவிரி குறித்தும் முழு விளக்கம் முன்பே அளிக்கப்பட்டுள்ளது
10:18 AM, 3 May
தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனு முன்பே பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது
10:18 AM, 3 May
டெல்லியில் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பின் முதல்வர் பேட்டி
10:18 AM, 3 May
காவிரி பற்றி பிரதமரிடம் தனியாக பேசுவது சரியாக இருக்காது - முதல்வர் பழனிசாமி
10:18 AM, 3 May
காலை 10.45 முதல் 11 மணிக்குள் இந்த வழக்கு விசாரிக்கப்பட இருக்கிறது
10:19 AM, 3 May
மத்திய அரசு கூடுதலாக இன்னும் 2 வாரம் கால அவகாசம் கேட்க வாய்ப்பு
10:19 AM, 3 May
காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் முடியும் நிலையில் இன்று விசாரணை
10:19 AM, 3 May
மத்திய அரசு இன்னும் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவில்லை
10:19 AM, 3 May
காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
10:19 AM, 3 May
திமுகவினர் கறுப்புக்கொடி காட்டியது பற்றி கவலையில்லை -நிர்மலா சீதாராமன்
10:20 AM, 3 May
கறுப்புக் கொடி காட்டுவது திமுகவின் உரிமை - நிர்மலா சீதாராமன்
10:25 AM, 3 May
தஞ்சை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
10:25 AM, 3 May
காவிரி: தஞ்சையில் ரயில் நிலையம் முற்றுகை
10:25 AM, 3 May
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் திவாகரன் ஆஜர்
11:03 AM, 3 May
பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் மின் சேவை துண்டிப்பு
11:03 AM, 3 May
ராஜஸ்தானில் புழுதி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு
11:18 AM, 3 May
கர்நாடகா தேர்தலை காரணம் காட்டி அவகாசம் கேட்டது மத்திய அரசு