எங்க போனாலும் எதை பேசினாலும் அக்கப்போரு.. திண்டுக்கல்லில் செல்லூரார் தெறிக்கவிட்ட அலப்பறை!
திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ உளறி கொட்டியது சர்ச்சையாகிவிட்டது.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் வந்திருந்த 50,100 பேரையும் தமது பேச்சால் தலைதெறிக்க ஓடவிட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
வைகை அணை நீரை தெர்மாகோல் போட்டு மூடி ஆவியாக்காமல் தடுத்த அற்புதத்தில் தொடங்கியது அமைச்சர் செல்லூர் ராஜூவின் மீம்ஸ் வாழ்க்கை... இன்றளவும் சமூக வலைதளங்களில் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறது.

அமைச்சர் செல்லூராரும் விடாது கருப்பாய் எங்கு போய் எதைப் பேசினாலும் மீம்ஸ்காரவுகளுக்கு ஏற்ற மாதிரியே எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவிலும் வெற்றிகரமாக அரங்கேற்றியிருக்கிறார் அமைச்சர் செல்லூரார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, எல்லாருமே காலையிலே சோர்ந்து போய் உட்கார்ந்தா எப்படி? என்னால் பேச எப்படி முடியும்? எல்லாரும் சுறுசுறுப்பாக இருங்கள் என்று கூறியதுடன் அடுத்ததாக ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். ஆம் "இந்த கூட்டுறவு வார விழாவில் 2 கோடி பயனாளிகள் வந்துள்ளீர்கள். எனவே உற்சாகமாக கை தட்டுங்கள்" என்றாரே பார்க்கலாம்..
மேடையில் இருந்த அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள், பயனாளிகள் எல்லோரும் அப்படியே 'ஷாக்' ஆகிப் போனார்கள். மொத்தமே 100 பேர் கூட இல்லாத விழாவில் 2 கோடி பேர் வந்துள்ளதாக அடித்துவிட்டால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.
பின்னர்தான் புரிந்தது.. .ரூ2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க வந்துள்ள பயனாளிகளே என்று பேசுவதற்கு பதிலாக 2 கோடி பயனாளிகளே என சுருக்கமாக பேசிட்டாராம் செல்லுராராம்.
அட மக்கா!
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications