'காலா கரிகாலன்' போஸ்டர்.. ரஜினி அமர்ந்திருக்கும் ஜீப்புக்கு ஏன் அந்த எண் தெரியுமா??
காலா பட போஸ்டரில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் ஜீப் எண் குறித்து சமூக வலைதளங்களில் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது.
சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் காலா பட போஸ்டரில் உள்ள ஜீப் எண் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'காலா' கரிகாலன் என நேற்று அறிவிக்கப்பட்டது. காலா என்பது நெல்லை பகுதி மக்கள் வழிபடும் நாட்டுப்புற தெய்வம் எனவும் கரிகாலன் என்பது தமிழ் மன்னரின் பெயர் என்றும் ரஞ்சித் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும் நெல்லையில் இருந்து மும்பையில் செட்டிலான தமிழர்களைப் பற்றிய கதைதான் இது எனவும் ரஞ்சித் கூறியிருந்தார். அதேபோல் மும்பையில் காட்பாதராக இருந்த திரவியம் நாடார் என்பவரது கதை எனவும் கூறப்பட்டு வருகிறது.

காலாவின் ஜீப்
இதனிடையே நேற்று மாலை காலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் ரஜினிகாந்த் ஒரு ஜீப் மீது அமர்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

தலித் அரசியல்
இப்போது அந்த ஜீப் எண்தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதப் பொருளாகி உள்ளது. ரஞ்சித் இயக்கும் படம் என்பதால் தலித் அரசியலை பேசும் படமாக இருக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.

அம்பேதக்ரை குறிப்பிடுகிறது?
இதனடிப்படையில்தான் காலா போஸ்டரில் உள்ள ஜீப் எண் MH 01 BR 1956 குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள BR என்பது பி.ஆர். அம்பேத்கரையே குறிக்கிறது; அம்பேத்கர் பல லட்சம் மக்களுடன் புத்த மதத்தைத் தழுவிய ஆண்டும் அவர் மறைந்த ஆண்டும் 1956 என்பதால் அவற்றை குறிப்பிடுகிறது எனவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

ஒடுக்கப்பட்டோரின் குரல்
கபாலி திரைப்படத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான வசனங்களை ரஜினி மூலமாக பேசினார் ரஞ்சித். இதேபாணியில் ஒடுக்கப்படும் மக்களின் குரலை காலா படத்தில் ரஜினி மூலம் ரஞ்சித் வெளிப்படுத்துகிறார் என்பதையே இந்த ஜீப் எண் சுட்டிக்காட்டுகிறது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications