Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. மேலும் 386 பேருக்கு பாதிப்பு.. ஒருவர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று ஒரு நாள் மட்டும் 386 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த பல மாதங்களாக கட்டுக்குள் இருந்தது. தற்போது ஒமிக்ரான் எக்ஸ்பிபி.1.5 வகை கொரோனா பரவல் காரணமாக தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

குறிப்பாக கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவது தினசரி கொரோனா பாதிப்பு கிட்டதட்ட 6 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

Corona continues to increase in Tamil Nadu 386 people are affected one person died

பலி எண்ணிக்கை 38,051 ஆக உயர்வு:நேற்று 369 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 386 ஆக உயர்ந்துள்ளது. 195 ஆண்கள் மற்றும் 191 பெண்கள் என மொத்தம் 386 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,051 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,099- ஆக உயர்ந்துள்ளது. விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த வந்த ஒருவருக்கும் சிங்கப்பூரில் இருந்து வந்த இரண்டு பேருக்கும் இலங்கையில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னையில் 116 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 பேருக்கும் கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், கோயம்புத்துரில் 18 பேர், கடலூரில் 16 பேர், காஞ்சிபுரத்தில் 13 பேர், சேலத்தில் 12 பேர், திருச்சியில் 11 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

பெரிய அளவு வீரியமாக இல்லை:பிற மாவட்டங்களில் 10 க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 99 ஆயிரத்து 404 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை 4,686- ஆகும். கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் என்ணிக்கை 186 ஆகும்.

Corona continues to increase in Tamil Nadu 386 people are affected one person died

முன்னதாக, இன்று காலை கொரோனா பரவல் அதிகரித்து வருவது பேசிய தமிழக மக்கள் நல்வழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரளா, மகராஷ்டிரா, டெல்லியில் அதிக அளவு கொரோனா பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். வைரசின் பாதிப்பு பெரிய அளவு வீரியமாக இல்லை" என்று கூறியிருந்தார்.

கொரோனா வைரசின் வீரியம் அதிகம் அளவு இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டாலும் தொற்று பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களுக்கும் கூட்டம் மிக்க இடங்களுக்கும் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+