தமிழகத்தில் எல்லாத் துறையிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது - கமல்ஹாசன் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து சென்னையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நான் ஓட்டுதான் போடுவேன், அரசு செயல்பாடு பற்றி மார்க் போட மாட்டேன். இப்போதே எனது கருத்தை சொல்லிவிட்டால் ரகசியமாக வாக்களிக்க அவசியம் இல்லையே என்று கூறினார்.

Corruption in all government department, says kamal hassan

மேலும் தசாவதாரம் எடுத்தபோது கொண்டாடியவர்களுக்கு விஸ்வரூபம் எடுத்தால் பிடிக்காது. எனது பல படங்களின் வெளியீட்டின்போது பலரும் எதிர்த்தபோது அரசும், மக்களும் வேடிக்கை பார்த்தார்கள். சமூக சேவைக்காக செய்கிறேன் என்று சொல்வதற்கு நான் அரசியல்வாதி அல்ல. தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Corruption in all government department's in tamilnadu, says actor kamal
Please Wait while comments are loading...