மனைவியை எம்.எல்.ஏ.வாக்க கொள்ளையடித்தேன்... தேமுதிக கவுன்சிலரின் கணவர் 'திடுக்' வாக்குமூலம்
சென்னை: தேமுதிக கவுன்சிலராக இருக்கும் மனைவியை எம்.எல்.ஏவாக்குவதற்காக கொள்ளையில் இறங்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை அடுத்த லட்சுமி நகரை சேர்ந்தவர் குமாரதேவன் (வயது 82). கடந்த மாதம் அவரது வீட்டுக்கு வந்த மர்மநபர் ஒருவர், தன்னை மாநகராட்சி அதிகாரி என்றும், வீட்டு வரி ரசீதை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

இதன் பின்னர் 2 நாட்கள் கழித்து பீரோவில் இருந்த 45 பவுன் நகைகள் திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குமாரதேவன் இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் சம்பவத்தன்று மாநகராட்சி அதிகாரி போல் வந்த நபர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து குமாரதேவன் வீட்டில் இருந்து 45 பவுன் நகையை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சுத்திப்பட்டுவை சேர்ந்த கணேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான கணேஷிடம் போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. தனது மனைவியை எம்.எல்.ஏ. ஆக்கவே கொள்ளையடித்ததாக பரபரப்பு தகவலை கணேஷ் தெரிவித்தார்.
அதாவது கணேஷின் மனைவி சுவீதா, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய தே.மு.தி.க. கவுன்சிலராக உள்ளார். அவரை எப்படியும் எம்.எல்.ஏ.வாக்கிவிடுவது என்பதற்காக சென்னையில் முகாமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார் கணேஷ்.
கொள்ளையடித்த நகைகளை விற்று பேரணாம்பட்டு சுற்றுவட்டாரத்தில் பணத்தை வாரி இறைத்து மக்களை வளைத்துப் போட்டிருக்கிறார். எந்த ஊரில் இருந்து நன்கொடை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் அள்ளி வீசியிருக்கிறார்.
இப்படியெல்லாம் செய்தால் சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போடுவார்கள் என்பது கணேஷின் ப்ளான். ஆனால் தற்போது போலீசில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இந்த கொள்ளைகளில் சுவீதாவுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications