மனைவிக்கு தெரியாமல் 4 கல்யாணம் - அலற வைக்கும் சேலம் அதிமுக கவுன்சிலர்!
சேலம்: சேலத்தில் மனைவிக்கு தெரியாமல் நான்கு பெண்களை திருமணம் செய்த அதிமுக கவுன்சிலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி பகுதியிலுள்ள 20 ஆவது வார்டு அ.தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் இரவீந்திரன். இவரின் முதல் மனைவி பெயர் சுதா. இவர் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், "எனக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் இரவீந்திரன், 20 ஆவது வார்டு கவுன்சிலராகவும், அ.தி.மு.க செயலாளராகவும் உள்ளார். என்னுடைய கணவர், எனக்கு தெரியாமலும், சட்ட விரோதமான வகையிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் புவனேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

பிறகு, பெரியார் நகரை சேர்ந்த இராமநாதன் என்பவரின் மகள் புவனேஸ்வரியையும், பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா என்பவரையும். அதே பகுதியை சேர்ந்த வாசு மகள் சத்யா என என்னை தவிர நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார்.
சந்தியா, சத்யா இருவரும் அம்மா உணவகத்தில் வேலை செய்த பொது அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களை திருமணம் செய்துள்ளார். "ஏன் இப்படி செய்கிறாய்?" என கேட்டால் இந்த பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நீ விருப்பம் இருந்தால் இரு. இல்லையெனில் விவாகரத்து வாங்கி கொண்டு போ என்று சொல்கிறார்.
இந்த பிரச்னை குறித்து வழக்கு கோர்ட்டுக்கு சென்று விட்ட நிலையிலும், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் கவுன்சிலர். எனக்கு அமைச்சர், மாவட்டம், பகுதி என்று எல்லோரும் உதவி செய்வார்கள். உனக்கு யார் வருவார்? பதவி இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்.
எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னையில் தலையிட்டு கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications