சாப்பாட்டுப் பிரச்சினை... ஏற்காடு வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

11வது சுற்றோடு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பிற்பகல் 12. 50 மணிக்கு வாக்கும் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. 2 மணியாகியும் தொடங்கப்படவில்லை.
12.50 மணிக்கு உணவு இடைவேளை என்று அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் ஊழியர்கள் சாப்பிடப் போனார்கள். ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது கலந்து கொண்ட கட்சிகளின் ஏஜென்டுகளுக்கு சாப்பாடு தரப்படவில்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு அவர்கள் முறையிட்டனர்.
ஏஜென்டுகளுக்கு உணவு தர ஏற்பாடு செய்ய வேண்டியவர் அதை சரியாக செய்யாததால் குழப்பமாகி விட்டதாக தெரிகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. அதன் பின்னர் பிரச்சினை சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.












Click it and Unblock the Notifications