அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் தெரிவித்த தம்பதிக்கு அதிமுகவிலிருந்து ஜெ. கல்தா
புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாள், அவரது கணவரும் கருப்பட்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான சொக்கலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் சிலர் சேர்ந்து கடந்த 25ம் தேதி விராலிமலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் விஜயபாஸ்கரை சந்தித்து தாய், சேய் நலவிடுதி அமைத்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது விஜயபாஸ்கர் அவர்களை ஜாதி பெயரை கூறி இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இது தொடர்பாக முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 5ம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் குதித்த அவர்கள் அதிமுக அலுவலகம் மீது கற்களை வீசித் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம் நடந்த மறுநாள் அமைச்சர் பூனாட்சி அதிமுகவில் இருக்கும் முத்தரையர் சங்கத்தினர், எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டத்தை கூட்டினார். கூட்டத்திற்கு வந்த கெங்கையம்மாளும், அவரது கணவரும் விஜயபாஸ்கர் கூறியதை எல்லாம் தெரிவித்தனர்.
இது குறித்த விசாரணை அறிக்கை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கெங்கையம்மாளையும், அவரது கணவரையும் கட்சியில் இருந்து நீக்கி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications